search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கேமர் ரோச்"

    வங்காள தேசத்திற்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டிக்கான வெஸ்ட் இண்டீஸ் அணியில் வேகப்பந்து வீச்சாளரான ஜோசப் அல்சாரி சேர்க்கப்பட்டுள்ளார். #WIvSL
    வங்காள தேச கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப் பயணம் விளையாடி வருகிறது. இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் ஆட்டம் ஆன்டிகுவா நார்த் சவுண்டில் நடைபெற்றது. இதில் வெஸ்ட் இண்டீஸ் இன்னிங்ஸ் மற்றும் 219 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    முதல் இன்னிங்சில் வங்காள தேசம் 43 ரன்னில் சுருண்டது. வெஸ்ட் இண்டீஸ் வேகப்பந்து வீச்சாளர் கேமர் ரோச் 12 பந்தில் ஐந்து விக்கெட்டுக்கள் கைப்பற்றி சாதனைப் படைத்தார்.



    இந்த போட்டியின்போது கேமர் ரோச்சிற்கு காயம் ஏற்பட்டது. இதனால் நாளை தொடங்க இருக்கும் 2-வது டெஸ்டில் கேமர் ரோச்சிற்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அவருக்குப் பதிலாக இளம் வீரரான ஜோசப் அல்சாரி வெஸ்ட் இண்டீஸ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
    வங்காள தேசதிற்கு எதிரான ஆட்டத்தில் 12 பந்தில் 5 விக்கெட்டுக்கள் வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் வீரர் கேமர் ரோச் சாதனைப் படைத்துள்ளார். #WIvBAN
    வெஸ்ட் இண்டீஸ் - வங்காள தேசம் இடையிலான முதல் டெஸ்ட் ஆன்டிகுவாவில் உள்ள நார்த் சவுண்ட் சர் விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானத்தில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களம் இறங்கிய வங்காள தேசம் கேமர் ரோச், கம்மின்ஸ், ஹோல்டர் ஆகியோரின் அபார பந்து வீச்சால் 18.4 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்து 43 ரன்னில் சுருண்டது.

    வங்காள தேச அணி 4.5 ஓவர் வரை விக்கெட் இழக்கவில்லை. கேமர் ரோச் வீசிய 5-வது ஓவரின் கடைசி பந்தில் தமிம் இக்பால் 4 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

    7-வது ஓவரை கேமர் ரோச் வீசினார். இந்த ஓவரின் கடைசி பந்தில் மொமினுல் ஹக்யூ (1) ஆட்டமிழந்தார். 9-வது ஓவரை ரோச் வீசினார். இந்த ஓவரின் 2-வது பந்தில் முஷ்பிகுர் ரஹிம் (0), 4-வது பந்தில் சாஹிப் அல் ஹசன் (0), 5-வது பந்தில் மெஹ்முதுல்லா (0) ஆட்டமிழந்தனர்.



    இதன்மூலம் 5 ஓவரில் 8 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுக்கள் கைப்பற்றினார். இந்த ஐந்து விக்கெட்டுக்களையும் கடைசி 12 பந்தில் கைப்பற்றினார். இதன்மூலம் மிகவும் குறைவான பந்தில் 5 விக்கெட்டுக்கள் கைப்பற்றிய வீரர் என்ற உலக சாதனையுடன் ரோச் கைக்கோர்த்துள்ளார்.

    இதற்கு முன் ஆஸ்திரேலியாவின் மோன்டி நோபிள், தென்ஆப்பிரிக்காவின் கல்லீஸ் ஆகியோர் 12 பந்தில் ஐந்து விக்கெட்டுக்கள் வீழ்த்தி சாதனைப் படைத்திருந்தனர்.
    ×